கர்நாடக ஆளுநரைத் திரும்பப் பெற பாஜக வலியுறுத்தல்!




கர்நாடக ஆளுநர் பரத்வாஜை திரும்பப் பெற வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பாஜகவைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை சபாநாயகர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

ஆனால், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான பிறகு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாகக் கூறினர். ஆனால் அதனை ஏற்காமல் கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆளுநர் பரத்வாஜ் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தார்.

இந்நிலையில் கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அவரச கூட்டம் நடந்தது. கூட்டத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு சட்டசபையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பலம் 121 ஆக உயர்ந்து உள்ளது.  நிலையில் அரசியலமைப்பு சட்டத்தை மீறி கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்த கவர்னர் பரத்வாஜை திரும்ப பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையே, கர்நாடகத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரைத்ததின் மூலம் இந்த மாநில மக்களை கவர்னர் பகிரங்கமாக அவமதித்து உள்ளார் என்று முதல்வர் எடியூரப்பா குற்றம் சாட்டி இருக்கிறார்.

பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 121 பேரையும் இன்று குடியரசுத் தலைவர் முன் ஆஜர்படுத்தவும் பாஜக முடிவு செய்துள்ளது.




Share your views...

0 Respones to "கர்நாடக ஆளுநரைத் திரும்பப் பெற பாஜக வலியுறுத்தல்!"

Post a Comment

 

Categories

About Me

My Photo
சண்முககுமார்
View my complete profile

© 2010 w All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info