ஜெயலலிதா வெற்றி தில்லியிலும் எதிரொலிக்கும்: மோடி





சென்னை, மே 16: தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றுள்ள வெற்றியானது, புதுதில்லியிலும் எதிரொலிக்கும் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.  ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி ஏற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தார். அப்போது, விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். ஊழல் இந்தத் தேர்தலில் மிக முக்கியமான பிரச்னையாக வாக்காளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா பெற்றுள்ள வெற்றி, நிச்சயம் தேசிய அரசியலிலும் எதிரொலிக்கும். ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின் தமிழகம் அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெறும். அவர் மீது தமிழக மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார் மோடி.




Share your views...

0 Respones to "ஜெயலலிதா வெற்றி தில்லியிலும் எதிரொலிக்கும்: மோடி"

Post a Comment

 

Categories

About Me

My Photo
சண்முககுமார்
View my complete profile

© 2010 w All Rights Reserved Thesis WordPress Theme Converted into Blogger Template by Hack Tutors.info